இன்றைய அல்குர்ஆன்
ஆன்மீகதொடர்!!
The -Holy Quran Verses!!
Arabic -Tamil &English
அல் பகரா -அந்த மாடு
அத்தியாயம் : 2
Al Bagrah -TheBull
Chapter ;2
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அல்லாஹ்வின் திருப்பெயரால்!!
In The Name of Allah!!
الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ ۗ وَمَن يَكْفُرْ بِهِ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
121. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் படிக்க வேண்டிய விதத்தில் அதைப் படிக்கின்றனர். அவர்களே அதில் நம்பிக்கை கொண்டவர்கள். அதை ஏற்க மறுப்போரே நட்டமடைந்தவர்கள்.
121. Those to whom We gave the Book; they read in the way that has to be read( it properly). It is only they who have faith in that. Those who disbelieve that are the losers.
يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ
122. இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலகத்தாரை விட உங்களைச் சிறப்பித்திருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!
122. O people of Israel, remember, the bounties I gave you and made you superior to other people of the world.
وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنفَعُهَا شَفَاعَةٌ وَلَا هُمْ يُنصَرُونَ
123. ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெறப்படாது. எவருக்கும் எந்தப் பரிந்துரையும் பயன்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
123. Fear the Day, when a person cannot help another person. (on that day),no compensation will be received from anybody. Whatever intercession(recommendation) it may be ( from whoever) will not be useful to anybody. They will not even be helped.
وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ ۖ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا ۖ قَالَ وَمِن ذُرِّيَّتِي ۖ قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ
124. இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்' என்று அவன் கூறினான். "எனது வழித்தோன்றல்களிலும்' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித்தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது" என்று அவன் கூறினான்.
124. When God tested Ibraaheem through various commands, he fulfilled them completely. He (God) said,” Indeed, I’m going to make you the leader of the people. He (Ibraaheem) asked,” (Make leaders) of my progeny (also)”. He said, “My promise will not (include) the unjust (among your progeny).”
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ۖ وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
125. இந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! "தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதிமொழி வாங்கினோம்.
125. Remind, We made that House a place of gathering for the people and a centre of security Make a place of worship in the ‘Maqamu Ibraaheem’. Allah got the promise from both Ibraaheem and Ismaail (and said),” You two purify My House for those who do ‘Tawaaf’, for those who observe ‘I’tikaf’ and for those who perform bowing and prostration.”
Al-Quran 2:125
இன்ஷாஅல்லாஹ்! நாளை தொடரும்!!
Continue Tomorrow!!
M,K,Mohamed ali
EmoticonEmoticon