The -Holy Quran Verses!!
Arabic -Tamil &English
அத்தியாயம் 13
அர்ரஃது- இடி
Chapter 13
Ar-Rad-- The Thunder
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அல்லாஹ்வின் திருப்பெயரால்
In The Name Of Allah
وَلِلَّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُم بِالْغُدُوِّ وَالْآصَالِ ۩
15. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.
15. And the things in the heavens and earth, whether they like it or not, submit only to Him. There shadows also submit to Him, in the morning and in the evening
قُلْ مَن رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُلِ اللَّهُ ۚ قُلْ أَفَاتَّخَذْتُم مِّن دُونِهِ أَوْلِيَاءَ لَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ نَفْعًا وَلَا ضَرًّا ۚ قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَىٰ وَالْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِي الظُّلُمَاتُ وَالنُّورُ ۗ أَمْ جَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ خَلَقُوا كَخَلْقِهِ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْ ۚ قُلِ اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ
16. "வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?'' என்று (முஹம்மதே!) கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! "அவனையன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்'' என்று கூறுவீராக! "குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? இருள்களும், ஒளியும் சமமாகுமா?'' என்று கேட்பீராக! "அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக படைத்தது யார்? என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்'' என்று கூறுவீராக!
16. Ask ( O Muhammad), “ Who is the God of the heavens and the earth?” and say Allah. And say, “Have you imagined protectors other than Him? They do not have the power even to do either good or bad to themselves”. And ask, “Are the blind and the seeing equal ? Are darkness and light equal?” And say, “Have they imagined partners to Allah? Have they created anything like Allah that any confusion occurred to them about who created’? It is Allah who created everything. He is Alone, the subjugating.
أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَسَالَتْ أَوْدِيَةٌ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّيْلُ زَبَدًا رَّابِيًا ۚ وَمِمَّا يُوقِدُونَ عَلَيْهِ فِي النَّارِ ابْتِغَاءَ حِلْيَةٍ أَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهُ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ اللَّهُ الْحَقَّ وَالْبَاطِلَ ۚ فَأَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ جُفَاءً ۖ وَأَمَّا مَا يَنفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ
17. வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரை ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தருவது நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான்.
17. He sent down the water from heaven. It follows to the capacity of the canals. The flood carries floating foam. Such foam occurs when the ornaments and utensils, are melted in the fire. Thus, Allah gives example for truth and lie. Foam disappears. That which is useful to people remains in the earth. Thus, Allah gives examples.
لِلَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمُ الْحُسْنَىٰ ۚ وَالَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا لَهُ لَوْ أَنَّ لَهُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُ مَعَهُ لَافْتَدَوْا بِهِ ۚ أُولَٰئِكَ لَهُمْ سُوءُ الْحِسَابِ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ الْمِهَادُ
18. தமது இறைவனின் அழைப்பை ஏற்றோருக்கு நற்கூலி உண்டு. அவனது அழைப்பை ஏற்காதோர் பூமியில் உள்ள அனைத்தும், அது போன்ற இன்னொரு மடங்கும் தமக்கு உரியதாக இருந்தாலும் அதை ஈடாகக் கொடுத்து விடுவார்கள். அவர்களுக்குக் கடுமையான விசாரணை உண்டு. அவர்களின் தங்குமிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம்.
18. There is good reward for those who accepts God’s invitation. Those who have not accepted His invitation will give everything on the earth and they will also be ready to give even if they own the like of it, as compensation. They have severe inquiry. Their dwelling (Home) is Hell. That is a very bad place for rest.
Al-Quran 13:18
இன்ஷாஅல்லாஹ்! நாளை தொடரும்!!
Continue Tomorrow!!
M,K,Mohamed ali
EmoticonEmoticon