Sunday, May 6, 2018

இன்றைய அல்குர்ஆன் ஆன்மீகதொடர்!!

Tags


The -Holy Quran Verses!!
Arabic -Tamil &English
அல் பகரா -அந்த மாடு
அத்தியாயம் : 2
Al Bagrah -TheBull
Chapter ;2
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அல்லாஹ்வின் திருப்பெயரால்!!
In The Name of Allah!!

وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَّا تَبِعُوا قِبْلَتَكَ ۚ وَمَا أَنتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ وَمَا بَعْضُهُم بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ۚ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم مِّن بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ إِنَّكَ إِذًا لَّمِنَ الظَّالِمِينَ

145. வேதம் கொடுக்கப்பட்டோரிடம்அத்தனை சான்றுகளையும் (முஹம்மதே!) நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளைப் நீர் பின்பற்றினால் அநீதி இழைத்தவராவீர்!

145. (O Muhammed), they will not follow your Qiblah even if you bring to the people of the Books, all the proofs. You are not to follow their Qiblah. Even among them a person does not follow the Qiblah followed by other. If you follow their desire, after the understanding came to you, indeed, you would be unjust.

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ ۖ وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ

146. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

146. To those We gave the Book they know him as they know their children. A group among them knowingly hides the truth.

الْحَقُّ مِن رَّبِّكَ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ

147. இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும். எனவே சந்தேகம் கொள்பவராக ஆகி விடாதீர்!

147. This truth has come from your God. So do not become doubters.

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

148. ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

148. Everybody has a direction to face. He faces that direction. So, you rush in doing good (deeds). Wherever you may be Allah will bring all of you (together). Indeed, Allah has power over all things.

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۖ وَإِنَّهُ لَلْحَقُّ مِن رَّبِّكَ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

149. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! அதுவே உம் இறைவனிடமிருந்து கிடைத்த உண்மை. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

149. You turn your face towards Masjid-ul- Haram, from whichever place you start. Indeed, that is the truth given by Allah. Allah is not unwatchful of what you do.

Al-Quran 2:149

இன்ஷாஅல்லாஹ்! நாளை தொடரும்!!
Continue Tomorrow!!
M,K,Mohamed ali


EmoticonEmoticon