Sunday, May 6, 2018

இன்றைய அல்குர்ஆன் ஆன்மீகதொடர்!!

Tags


The -Holy Quran Verses!!
Arabic -Tamil &English
அத்தியாயம் 13
அர்ரஃது- இடி
Chapter 13
Ar-Rad-- The Thunder
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அல்லாஹ்வின் திருப்பெயரால்
In The Name Of Allah
أَفَمَن يَعْلَمُ أَنَّمَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَىٰ ۚ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ

19. உமது இறைவனிடமிருந்து அருளப்பட்டது உண்மையே என்று அறிந்திருப்பவர், குருடரைப் போல் ஆவாரா? அறிவுடையோரே படிப்பினை பெறுவார்கள்.

19. Will the one, who has known what has been revealed from your God is true, be blind? Only the people of understanding will get a lesson.

الَّذِينَ يُوفُونَ بِعَهْدِ اللَّهِ وَلَا يَنقُضُونَ الْمِيثَاقَ

20. அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள். உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள்.

20. They will fulfill Allah’s agreement. They will not break their agreement.

وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ

21. இணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளை இட்டவற்றை (உறவினரை) இணைத்துக் கொள்வார்கள்; தமது இறைவனுக்கு அஞ்சுவார்கள்; கடுமையான விசாரணைக்கும் அஞ்சுவார்கள்.

21. And they will unite those (relatives) about whom Allah has ordered (them) to unite. They will fear their God. They will fear severe inquiry.

وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَٰئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ

22. அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.

22. And they will resort to patience desiring their God’s satisfaction. They will establish prayer. They will spend (in good deeds) secretly and openly from what We have given to them. They will prevent bad with good. The (good) end in the world is for them.

جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ

23. அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள்.

23. They, their parents , wives and the good among the progeny will enter into the permanent gardens of the Paradise. Angels will come to them from every gate.

Al-Quran 13:23
இன்ஷாஅல்லாஹ்! நாளை தொடரும்!!
Continue Tomorrow!!
M,K,Mohamed ali


EmoticonEmoticon