இன்றைய அல்குர்ஆன்
ஆன்மீகதொடர்!!
The -Holy Quran Verses!!
அல் பகரா -அந்த மாடு
அத்தியாயம் : 2
Al Bagrah -The Bull
Chapter : 2
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்!!
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَلَمَّا جَاءَهُمْ كِتَابٌ مِّنْ عِندِ اللَّهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ وَكَانُوا مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا فَلَمَّا جَاءَهُم مَّا عَرَفُوا كَفَرُوا بِهِ ۚ فَلَعْنَةُ اللَّهِ عَلَى الْكَافِرِينَ
89. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு எதிராக அவர்கள் இதற்கு முன் உதவி தேடி வந்தனர். அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்த போது, (அதாவது) அவர்கள் அறிந்து வைத்திருந்தது அவர்களிடம் வந்த போது, அதை (ஏற்க) மறுத்து விட்டனர். மறுப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது.
89. Before this they had sought help against the disbelievers (of only one God). When the Holy Book came to them from Allah, confirming that which was in their possession, (that is) about which they (already) knew, they refused to accept. Allah’s curse is on those who disbelieve.
بِئْسَمَا اشْتَرَوْا بِهِ أَنفُسَهُمْ أَن يَكْفُرُوا بِمَا أَنزَلَ اللَّهُ بَغْيًا أَن يُنَزِّلَ اللَّهُ مِن فَضْلِهِ عَلَىٰ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۖ فَبَاءُوا بِغَضَبٍ عَلَىٰ غَضَبٍ ۚ وَلِلْكَافِرِينَ عَذَابٌ مُّهِينٌ
90. அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை அல்லாஹ் அருளியதில் பொறாமைப்பட்டதே இதற்குக் காரணம். எனவே கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனை இருக்கிறது.
90. It is very bad that they sell themselves so us to reject Allah’s revelation. It is because they became jealous of Allah’s blessings which were given by Him to whom He willed, among His servants. So, they received anger upon anger. Disgraceful suffering awaits the dis-believers of (only one God).
وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَهُمْ ۗ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنبِيَاءَ اللَّهِ مِن قَبْلُ إِن كُنتُم مُّؤْمِنِينَ
91. "அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்' என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்துவதாகவும் இருக்கிறது. "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?' என்று (முஹம்மதே!) கேட்பீராக!
91. When it is said to them, “Believe in what is revealed by Allah,” they reply, “We believe only in what was revealed to us”. They reject (the Holy Quran) which is revealed later. But, it is truthful and confirm that which they have. Ask them (O Muhammad) , “If you have believed, then why did you kill the Messengers of Allah , before?”
وَلَقَدْ جَاءَكُم مُّوسَىٰ بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ
92. மூஸா தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். அவருக்குப் பின் அநீதி இழைத்து காளைக்கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.
92. Indeed, Moosa came to you with clear proofs. When he left, you committed wrong by presuming the calf as (God) .
Al-Quran 2:92
இன்ஷாஅல்லாஹ்! நாளை தொடரும்!!
Continue Tomorrow!!
M,K,Mohamed ali
EmoticonEmoticon